ஓசூர் அருகே காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டி.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் கலந்துக்கொண்டு போட்டியை துவக்கி வைத்து மாணவிகள் படிப்பில் மட்டும் இன்றி விளையாட்டு துறைகளில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு துறை சார்பாக முதல் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

ஓசூர் அருகே உள்ள அந்தி வாடி மினி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் கிருஷ்ணகிரி, ஓசூர், இராயக்கோட்டை, சூளகிரி, பேரிகை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுத் துறையின் பொறுப்பாளர் பீட்டர் பாக்கியராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகளீருக்கான கால்பந்துப் போட்டியை கிருஷ்ணகிரி முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப்பிரிவு சாப்பில் பள்ளி மாணவிகளுக்கு இடையிலான இந்த கால்பந்துப் போட்டியில் அதிக அளவில் மாணவிகள் கலந்துக் கொண்டுள்ளது மிகவும் மகிழ்சியாக உள்ளது.
விளையாட்டில் வெற்றி தோல்வி கண்டிப்பாக உள்ளது தோல்விதான் ஒருவருடைய வெற்றிக்கு வழிவகுக்கும் ஆகையால் படிப்பில் கவனம் செலுத்துவது போல விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் படிப்பு மற்றும் விளையாட்டிலும் சாதித்துவிட்டால் நீங்கள் மிகப்பெரியவர்களாக உருவாக முடியும் என்று
குறிப்பிட்டார்.
மேலும் இந்த விழாவில் முன்னாள் மேற்கு மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, மேற்கு மாவட்டத் தலைவர் ஹரிஸ்பாபு, ஓசூர் மாநகராட்சி தலைவர் தியாகராஜன். பர்கூர் சட்ட மன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், வட்டாரத் தலைவர் இராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
