கிருஷ்ணகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலை ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் அதிமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த் வட்டக் கழக செயலாளர் ஆனந்த் பாபு, ஆகியோர் தலைமையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.

அதனை தொடர்ந்து அந்த பகுதியில் வாழும் பொது மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை ஒட்டி ஹாட் பாக்ஸ்க்குகளை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு ஹாட் பாக்ஸ் பெட்டிகளை வாங்கி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் வடக்கு பகுதி செயலாளர் அசோக ரெட்டி, ஒன்றிய செயலாளர் ரவிக்குமார்,பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், பாசறை மாவட்ட செயலாளர் ராமு,
எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார், பாசறை மாவட்ட நிர்வாகி சுரேஷ், கழக நிர்வாகி தேவராஜ், வட்ட செயலாளர் சிவகுமார், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ