வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஏற்படும் மழை பெரு வெள்ளம் போன்ற அபாய நிகழ்வுகளை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஒத்திகை .!

கிருஷ்ணகிரி

வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஏற்படும் மழை பெரு வெள்ளம் போன்ற அபாய நிகழ்வுகளை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஒத்திகை .!

கிருஷ்ணகிரிஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மிக உயர்ந்த கட்டிடங்களில் எதிர்பாராத வகையில் தீ பரவினால் அத் தீயிணை கட்டுப்படுத்துதல், அனைப்பது மற்றும் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஏற்படும் மழை பெரு வெள்ளம் போன்ற அபாய நிகழ்வுகளை கட்டுப்படுத்தல் தொடர்பாக போலி ஒத்திகை பயிற்சி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்சித்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து கிருஷ்ணகிரியில் ஒத்திகை நிகழ்வு நடத்ப்பட்டது.

இந்நிகழ்வில் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் சேகரமாகும் அட்டைப் பெட்டிகள் மற்றும் முழுமையாக எரிந்து சாம்பலாக கூடிய துணிவகைகள் மெத்தை விரிப்புகள் போன்ற பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டாலும் மிக உயர்ந்த கட்டிடங்களில் மின் கசிவினால் தீ பரவினால் தண்ணீர் பாய்ச்சி எவ்வாறு தீயிணை கட்டுப்படுத்தி அணைத்திடுவது / மருந்து மற்றும் வேதிப்பொருட்கள் எரிபொருட்களான பெட்ரோல், டீசல், கசடு எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயினை கட்டுப்படுத்தி அணைத்திடுவது மற்றும் எரிவாயு கேஸ் சிலிண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்தி அணைத்து விடுவது போன்ற போலி ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது.

மழை மற்றும் பேரிடர் காலங்களில் மரங்கள் விழுந்த பகுதியை அப்புறப்படுத்துதல், கட்டுமான ஈடுபாடுகளில் உள்ள கம்பிகளை வெட்டி எவ்வாறு உள்நுழைதல், நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டோரை எவ்வாறு கயிறு, லைப் ஜாக்கெட், மிதவைப் பொருட்களைக் கொண்டு உடனடியாக எப்படி காப்பாற்றுதல் போன்ற நிகழ்வுகளையும் செய்தி காட்டப்பட்டது. 

தொடர்ந்து பாம்புகள் வந்துவிட்டால், அதனை அடித்து துன்புறுத்தாமல், அதனை எவ்வாறு பிடித்து கோணி பையில் கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரிடம் ஒப்படைத்திட வேண்டும் என்றும், இது போன்ற அவசர காலங்களில் தங்களால் மேற்கண்ட நிகழ்வுகளில் ஒத்திகை பயிற்சியாக செய்து காட்டப்பட்ட நடவடிக்கைகள் செய்வதில் தங்களுக்கு முடியாத பட்சத்தில் உடனடியாக தொடர்புக்கு 112 என்ற அலைபேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்குமாறும் அந்த எண்ணில் இருந்து தங்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் எனவும் தெரிவித்து போலி ஒத்திகை நிகழ்ச்சியினை  செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்வுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. கே சத்தியபாமா அவர்கள் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மா.பாபு அவர்களும் தலைமை தாங்கினர். மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்  கா.அந்தோணிசாமி  தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். 

மருத்துவக் கல்லூரி நிலைய உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ் உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஜே ஆர் டி ராஜா மரு தினேஷ், துணை முதல்வர் பொறுப்பு மரு. சுபதா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள் மரு. சங்கமேஸ்வரன், மரு. சரவணன், மரு.சங்கீதா, மரு.சதாசிவம், மரு. விமலா, மரு.விஜய், மரு கேசவன், கல்லூரி நிர்வாக அலுவலர் எஸ் கே சரவணன், மருத்துவமனை இளநிலை நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், திருமதி சுமதி, அலுவலக கண்காணிப்பாளர் முத்துராமன், கலைக்கோவன், செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி அனிதா, திருமதி சரளா மாதவி, செவிலியர்கள் தனலட்சுமி உள்ளிட்ட குழுவினரும் மற்றும் மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்கள் கிரிஸ்டல் மேலாளர் பிலிப் மோன்ஸ்,மேற்பார்வையாளர்கள் சதீஷ், மீரா, கதிர், அனிதா உள்ளிட்ட பொதுமக்கள் பயிற்சி பெற்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ