ரூ.105.00 இலட்சம் மதிப்பீட்டில் குட்டூர் ஊராட்சி பட்டலபள்ளி கூட்ரோடு முதல் ஆம்பள்ளி தார்சாலை மேம்படுத்துதல் .!

கிருஷ்ணகிரி

ரூ.105.00 இலட்சம் மதிப்பீட்டில் குட்டூர் ஊராட்சி பட்டலபள்ளி கூட்ரோடு முதல் ஆம்பள்ளி தார்சாலை மேம்படுத்துதல் .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தெற்கு ஒன்றியம், NABARD திட்டத்தின் கீழ் ரூ.105.00 இலட்சம் மதிப்பீட்டில் குட்டூர் ஊராட்சி பட்டலபள்ளி கூட்ரோடு முதல் ஆம்பள்ளி தார்சாலை மேம்படுத்துதல் மற்றும் ரூ.54.79 இலட்சம் மதிப்பீட்டில் குட்டூர் ஊராட்சி கூச்சூர் ஆம்பள்ளி சாலை  முதல் காரியாமங்கலத்தூர் கவாடி கவுண்டர் வட்டம் தார்சாலை மேம்படுத்துதல்,  ரூ.36.39 இலட்சம் மதிப்பீட்டில் குட்டூர் ஊராட்சி சேக்கினாம்பட்டி - பாரதிபுரம் தார்சாலை மேம்படுத்துதல்,  ரூ.36.39 இலட்சம் மதிப்பீட்டில் ஒப்பதவாடி ஊராட்சி கிருஷ்ணகிரி - ராணிபேட்டை சாலை முதல் குண்டியல் நத்தம் தார்சாலை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA  அவர்கள் கலந்து கொண்டு  பூமி பூஜை செயது துவக்கிவைத்தார்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,  அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் BLA 2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள்  அனைவரும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ