கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூர் கிராமத்தில் மாற்றுக்கட்சியிருந்து விலகி 100 க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூர் கிராமத்தில் மாற்றுக்கட்சியிருந்து விலகி 100 க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூர் கிராமத்தில் மாற்றுக்கட்சியிருந்து விலகி 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா மற்றும் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், இளைஞர் அணி பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கே.பி முனுசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் நீண்ட நாள் கோரிக்கையான கண்காணிப்பு கேமரா அமைக்கக் கோரி பாஞ்சாலியூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் பாஞ்சலியூர் முழுவதும் மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது அவர் சொந்த செலவில்2 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா அமைத்து கொடுத்து அதை கே.பி. முனுசாமி துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, சேலம் IT Wing மண்டல இணைச் செயலாளர் நிர்மல் குமார், இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் ரவி, அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
