காவேரிப்பட்டிணத்தில் உள்ள காந்திஜி நூற்றாண்டு நினைவு மண்டபத்தினை மீட்கப் போராடும் காங்கிரஸ் கட்சியினர்."

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டிணத்தில் உள்ள காந்திஜி நூற்றாண்டு நினைவு மண்டபத்தினை மீட்கப் போராடும் காங்கிரஸ் கட்சியினர்."

காவேரிப்பட்டிணத்தில் உள்ள காந்திஜி நூற்றாண்டு நினைவு மண்டபத்தினை மீட்கப் போராடும் காங்கிரஸ் கட்சியினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில் 1956-ம் ஆண்டு அன்றைய சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் தியாகி நாகராஜ் மணியகார் அவர்கள் காந்திஜின் கொள்கைகளை பரப்புவதற்காக அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆட்சியர்  மூலமாக 38 செண்ட் நிலத்தினை பெற்றார்.

அந்த நிலத்தில் முன்னாள் ஒசூர் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன் அவர்களின் தந்தையார் திரு.அப்பாவு பிள்ளை அவர்களால்  மண்டபம் கட்டி காங்கிரஸ் கட்சிக்காக கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு டவுன் ஹால் கமிட்டி என்ற அமைப்பை உருவாக்கி பாரமாரித்து வந்தனர்.

இதனை அடுத்து 1978 -ஆண்டு தியாகி  நாகராஜ் மணியகார் அவர்கள் காலமானதையடுத்து அரசாங்கம் கொடுத்த அந்த நிலத்தில் அவருடைய உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டது,

அதன் பின்னர் 1985-ம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.பட்டாபி நாயுடு அவர்கள் டவுன் ஹால் கமிட்டி என்பதை மாற்றி காந்திஜி நினைவு நூற்றாண்டு மண்டபம் என்று பெயர் வைத்து காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு காங்கிரஸ் அலுவலகமாக செயல்படுத்தி வந்தார். பின்னர் 1998 ல் திரு.பட்டாபி நாயுடு அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்திஜி நூற்றாண்டு மண்டபத்தினை  அபகரிக்க முயன்றனர்.

அப்போது கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வாழப்பாடி கே.இராமமூர்த்தி அவர்களின் முயற்சியால் அது தடுக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த நிலத்தினை 2004-ம் ஆண்டு காவேரிப்பட்டினம் பேருராட்சியும் இதனை அபகரிக்க முயற்சி செய்தது,
 
அப்போதைய மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த காசிலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருமதி அன்னை சோனியாகாநிதி, மத்திய அமைச்சர்  பா.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர் இ.கே.வி.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் லெட்டர்பேடில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தினை காப்பாற்றி கொடுங்கள் என்று அவர் கைப்பட கடிதம் எழுதினார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தினை காப்பற்றுவதற்காக 2005-ஆண்டு அன்றைய மாவட்டத்தலைவராக இருந்த காசிலிங்கம் அறக்கட்டளையின் தலைவராகவும், அன்றைய வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த எல். சுப்பிரமணியன் அவர்கள் பொருலாளராகவும், செயலாளராக ஐ.என்.டி.யு.சி. ஜெகநாதனும் அறக்கட்டளை உறுப்பினர்களாக சம்பத் ஆசாரி, டி. சுப்பிரமணி, கே.பூபாலன், கே.வி.எஸ்.தணிகாசலம், பி.சி.ராமன், அண்பழகன் உள்பட 9 பொறுப்பாளர்களை நியமித்து ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு கடந்த 2005-ம் அறக்கட்டளையாக புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் காங்கிரஸ் கட்சியும், அறக்கட்டளையும் ஒன்றாக இணைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்ததன்படி அனைத்து காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது, இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர்கள் அனைவரும் காந்திஜி நினைவு நூற்றாண்டு மண்டத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளனர் என்பது வரலாறு,

மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நினைவு அஞ்சலிக்கூட்டங்களும் காங்கிரஸ் கட்சி சார்பில் 
நடைபெற்று வந்தது. 

இதனைத் தொடர்ந்து 2014 மற்றும் 2019-ம் ஆண்டில் நடைப்பெற்ற  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தேர்தல்
அலுவலகமாகவும் செயல்பட்டு வந்தது மட்டுமின்றி 1965 முதல் 2019 வரை சுமார் அரை நூற்றாண்டுகள் வரை அனைத்து காங்கிரஸ் நிகழ்சிகளும் இங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் செல்லக்குமார் அவர்கள் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த காசிலிங்கமும் இணைந்து மூன்றாவது நபருக்கு இந்த நிலத்தினை குத்தகைக்கு விட முயற்சி செய்ததை அப்போதைய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த எல். சுப்பிரமணியன் அவர்களும், வட்டார தலைவராக இருந்த ராமன், நகர தலைவராக இருந்த தக்காளி தவமணி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கட்சியின் பொறுப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடம் சொந்தமில்லை என்று வட்டார தலைவர் திரு. ராமன், நகர தலைவர் தக்காளி தவமணி ஆகியோர் மீது முன்னாள் காங்கிரஸ் தலைவர் காசிலிங்கம் அவர்கள் புகார் மனுவினைக் கொடுத்தார்.

இது தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் அவர்களிடம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் அவர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும்  பொறுப்பாளர்களும் ஒன்று சேர்ந்து முறையிட்ட போது டாக்டர் செல்லக்குமார் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், முன்னாள் மாவட்டத் தலைவர் காசிலிங்கம் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த நிலம் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும்  சொந்தம் இல்லை என்று  கூறினார். 

அத்துடன் இல்லாமல் அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்த நிலம்  காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் என்று கூறி யாரும் வந்தாலும் அவர்களை கைது செய்யுமாறு கைபேசி மூலம் பேசினார்.

இதனையடுத்து முன்னாள் மாவட்டத் தலைவர் காசிலிங்கம், காவேரிப்பட்டினம் காவல்துறையினர்களின் துணையோடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மிரட்டியதோடு காந்திஜி நூற்றாண்டு மண்டபத்திற்கு நுளையவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் கடந்த 2020 ஆண்டு அவர் நீதி மன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான வட்டார தலைவர் திரு.கே.எம். இராமன், நகர தலைவர் கே.எம். தக்காளி தவமணி, பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.கருணாமூர்த்தி, மாவட்ட செயலாளர் சி. கோவிந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் கே.எம்.ராமசந்திரன் ஆகியோர் மீது கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை காங்கிரஸ் கட்சி சார்பாக அப்போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இந்த வழக்கினை  காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களைக் கொண்டு நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அறக்கட்டளையின் தலைவர் காசிலிங்கம் அவர்கள் அறக்கட்டளையின் பொருளராக இருந்து வந்த எல். சுப்பிரமணியன் அவர்களை அறக்கட்டளையின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கினார். இதனையடுத்து 2023- - ஆண்டு அறக்கட்டளையின்  வழக்கு திரு. காசிலிங்கம் தரப்பினருக்கு சாதகமாக நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மாவட்ட காங்கிரஸ்  தலைவர் எல் சுப்பிரமணியன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்,

மேலும் இந்த வழக்கு 2024-ம் ஆண்டு அறக்கட்டளைக்கு செந்தமில்லை என்று காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மீண்டும் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2024-ல்  காசிலிங்கம் அவர்கள் மேல் முறையீடு செய்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டு 20 - 10 - 2025 வரை வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  கடந்த 16.10.2025 அன்று காவேரிப்பட்டினத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்திஜி நூற்றாண்டு மண்டபத்தினை ஆய்வு மேற்கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுத்தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான .கே.வி. தங்கபாலு அவர்களிடம், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினருமான எல். சுப்பரமணியன் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தினை மீட்டு காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டி அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். 

மேலும் சொத்து பாதுகாப்பு குழுவினர்களிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்  காங்கிரஸ் கட்சிக்கு அலுவலமாக செயல்பட்டு வந்த இந்த நிலத்தினை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு காந்திஜி நூற்றாண்டு மண்டபத்தினை மீட்பதற்கு போரடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் 

மாருதி மனோ