குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக கே. ஆர்.பி. அணையினை கட்டி மாவட்டத்தை வளமாக்கிய பெருந்தலைவர் காமராஜரின் சிலையை அணையின் முன்பாக அமைக்க கோரிக்கை. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்த திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி அவர்களிடம் கே. ஆர்.பி. அணையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்குமாறு வேண்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் கோரிக்கை மனுவினை கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணியிடம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்காக குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக கே. ஆர்.பி. அணையினை கட்டி மாவட்டத்தை வளமாக்கிய பெருந்தலைவர் காமராஜரின் சிலையை அணையின் முன்பாக அமைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி கிழக்கு
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மாவட்டத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் கோரிக்கை மனுவினைக் கொடுத்தார்.

மனுவினை பெற்றுக்கொண்ட கீ.வீரமணி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக அணை கட்டிய பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக அவரின் சிலை அமைக்க தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ தலைவர் எல். சுப்பிரமணியன்....
கே.ஆர்.பி. அணை கட்டி கிருஷ்ணகிரி , தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டத்தை வளமாக்கிய பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக அணையின் முன்பாக சிலை அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனாலும் இது வரை எந்த முன்னேறமும் இல்லை, இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகருக்கு வந்த கீ.வீரமணி அவர்களிடம் கே.ஆர். பி. அணையில் காமராஜரின் சிலை வைக்க தமிழக முதல்வரிடம் உரிய அனுமதி பெற்று தருமாறு மனு கொடுத்துள்ளோம்.
இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி அணையில் காமராஜரின் சிலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிலை அமைக்க உரிய அனுமதி கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் மற்றும் திராவிடர் கழகத்தினை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
