ஸ்ரீ பைரவர் திருக்கோவில் வளர்பிறை அஸ்டமி பூஜை. !

கிருஷ்ணகிரி

ஸ்ரீ பைரவர் திருக்கோவில் வளர்பிறை அஸ்டமி பூஜை. !

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற வளர்பிறை அஸ்டமியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஶ்ரீ பிரவாணந்தபுரி மஹா சுவாமிகள் கலந்துக்கொண்டு வழிபாடு நடத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வளர்பிறை அஸ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

இந்த நிலையில் ஆன்மிக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள கர்நாடகா மாநிலம் சிவானாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ஆதி சக்தி மஹா சமஸ்தான மடத்தின் ஸ்ரீ பிரவானந்தபுரி 
மஹா சுவாமிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்  பி.சி.சேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கந்திகுப்பம் ஶ்ரீ பைரவா திருக்கோவிலில் 
உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீ பிரவானந்தபுரி மஹா சுவாமிகள் கலந்துகொண்டு
ஸ்ரீ பைரவா திருக்கோவிலில் வளாகத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ வினாயகர், ஸ்ரீ முருகன், அருள்மிகு திரிபுரி பைரவி அம்மாள், ஸ்ரீ கால பைரவர் மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோவிலில் உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், நாட்டில் நல்ல மழை பொழித்து விவசாயம் செழித்திடவும் வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கந்திகுப்பம் ஶ்ரீ பைரவர் திருக்கோவில்  பைரவா சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இருந்தும் 
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரவானந்தபுரி மஹா சுவாமிகள் கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில், சூரண்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சௌணகர்ஷண பைரவர் திருக்கோவில் மற்றும் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் நடைபெற்ற வளர்பிறை அஸ்டமி பூஜையில் கலந்துக் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ