தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி. 234 தொகுதிகளில் களமிறங்கும் 'நமமுக' .!
அரசியல்

தமிழகத்தில் 'தேசிய செட்டியார்கள் பேரவை' அமைப்பை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வந்த ஜெகநாத் மிஸ்ரா, தற்போது ' நமது மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார்.
புதிய கட்சியின் கொடி அறிமுக விழா இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. புதிய கட்சியின் நோக்கம் குறித்து பேசிய ஜெகநாத் மிஸ்ரா, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் அடிப்படையில் செயல்படும் அரசியல் வலையமைப்பாகவே இந்தக் கட்சி செயல்படும் என அவர் கூறினார்.
தற்போது தமிழகத்தில் 6 தேசிய கட்சிகளும், 19 மாநிலக் கட்சிகளும் தேர்தல் ஆட்டத்தில் உள்ள நிலையில், 'நமமுக' என்ற சுருக்கப்பெயருடன் புதிய கட்சி களமிறங்குவதை அடுத்து இது 20-வது மாநிலக் கட்சியாகப் பதிவாகும்.
பொதுமக்கள் மற்றும் சமூகத் தலைவர் பலரும் இதில் பங்கேற்க உள்ளனர். சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான ஆதரவு உள்ளிட்ட கோட்பாடுகளை முன்வைத்து, மக்கள் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட கட்சியாக 'நமமுக' உருவாகியுள்ளது.
புதிய கட்சியின் தொடக்கம், மாநில அரசியலில் ஒரு புதிய சுழற்சி தொடங்கவுள்ளதாக மதிப்பீடு செய்யப்படுகிறது.