வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் .!

தென்காசி

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் .!

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்

தென்காசி அக் 16

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கட்டபொம்மனின் 266வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார் மாவட்ட காங்கிரஸ் 
ஓ பி சி பிரிவு தலைவர் திருஞானம் திமுக நகர செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்டபொம்மன் திருவுருவப்
படத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றிய பெருந் தலைவர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்முத்தையா பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் சரவணன் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கட்டபொம்மன் பேரூராட்சி கவுன்சிலர் மாரிமுத்து பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வம் சக்திவேல் கருப்பையா சிபிஎம் விவசாய சங்க தலைவர் பெரியசாமி மருத்துவர் அணி முத்துகுமார்  சுடலை தகவல் கலை இலக்கிய அணி தலைவர் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கட்டபொம்மன் அறக்கட்டளை செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்