ஊத்தங்கரை வாசிப்பு இயக்கமும் - தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா .!

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை வாசிப்பு இயக்கமும் - தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா .!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வாசிப்பு இயக்கமும் - தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய ஊத்தங்கரை முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா நிகழ்வில் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

பூமியில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒருவகையில் காலநிலை மாற்ற அறிகுறிகளை உணர்கிறார்கள்! சுற்றுச்சூழல் ஆபத்து, அதிர்ச்சி அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று ஐ.நா.குழந்தைகள் நிதியம் அறிவித்துள்ளது.

இன்னும் பிறவா தலைமுறைகளின்  வாழும் உரிமையை கேள்விற்குள்ளாக்கிய மனித நடவடிக்கைகளின் மீது மீளும் பார்வையை உருவாக்கிய இந்த நிகழ்வின் பேருரையில் 

எல்லா உயிர்களும் இன்பம் எய்தும் ஓர் பண்பட்ட வாழ்வு நெறியை நோக்கி பயணிக்க வேண்டிய தேவையினை வலியுறுத்தி பேசினார் கோவை சதாசிவம்.

செய்தியாளர்

மாருதி மனோ