ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து. 3 பேர் படுகாயம்..!

கிருஷ்ணகிரி

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து. 3 பேர் படுகாயம்..!

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து. 3 பேர் படுகாயம்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டையில் இருந்து வேலூர் நோக்கிச்சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில்  இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர்.  படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இதில் விஜயகுமார், நரேந்திர சிங்  ஆகிய 2  இளைஞர்களை மேல் சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் நகர போலீஸார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புற்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ