கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதியதாக நியமானம் செய்யப்பட்டுள்ள எம்.சி. இரகு கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு, பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது நன்றியை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உறுதி.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக எம்.சி. இரகுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவின்படி முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, எதிர்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக புதியதாக நியமானம் செய்யப்பட்டுள்ள எம்.சி. இரகு கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை ஒசூரில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.சி. இரகு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், வட்டார, நகர பொறுப்பாளர்கள், பேருராட்சி பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது நன்றினை தெரிவித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி நமது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுப்படுத்த அதற்கான பணிகளை தீவிரப்படுத்தப்படும் என்று கூறி காங்கிரஸ் கட்சியினர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
மாருதி மனோ
