மிட்ட அள்ளி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.!
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மிட்ட அள்ள நடு நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்ட அள்ளி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் கலந்துகொண்டு மூவர்ணக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி
அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளையும் வழங்கி இந்தியா சுதந்திரமடைய வேண்டி மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த விழாவில், பள்ளியின் துணை ஆசிரியர்களான விஜயன் ரமேஷ் பாபு, ஊர் கவுண்டர் குப்புசாமி, மந்திரி கவுண்டர் மணிகண்டன். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாலம்மாள், முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் விஞ்ஞானம், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
