சாலை மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

சாலை மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட, பர்கூர் வடக்கு மற்றும் மத்திய ஒன்றியம், கந்திகுப்பம் ஊராட்சியில் கனிமங்களும் குவாரிகளும்- 2025-2026, ரூ.99.73 இலட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி கந்திகுப்பம் சாலை முதல் பைரவர் கோவில் வரை தார்சாலை மற்றும், ரூ.86.29 இலட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி கந்திகுப்பம் சாலை முதல் பைரவர் கோவில் வரை தார்சாலை மேம்படுத்துதல், ரூ.26.86 இலட்சம் மதிப்பீட்டில் கந்திகுப்பம் சாலை முதல் பைரவர் கோவில் வரை தார்சாலை  மற்றும் ரூ.18.82 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்,

தூய்மை பாரத இயக்கம் 2025-2026 ரூ. 15.70 இலட்சம் மதிப்பீட்டில் கந்திகுப்பம் ஊராட்சி செங்கொடி நகர் பைரவர் ஆலயம் அருகில் 5 எண்ணிக்கை கொண்ட குளியல் அறை மற்றும் 5 எண்ணிக்கை கொண்ட ஆண்கள் கழிப்பறை கட்டுதல் ஆகிய பணிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப, கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான தே.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள்,  கழகத் தோழர்கள், என அனைவரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ