ஶ்ரீ கனகா துர்கா தேவி திருக்கோவில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற மஹா சண்டி ஹோமம் .!

கிருஷ்ணகிரி

ஶ்ரீ கனகா துர்கா தேவி திருக்கோவில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற மஹா சண்டி ஹோமம் .!

பூவத்தி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ கனகா துர்கா தேவி திருக்கோவில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற மஹா சண்டி ஹோமத்தில்  ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கனகா துர்கா தேதி திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது,

உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட மஹா சண்டி ஹோமத்தில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் பூர்ணாகூதி மற்றும் நவக்கிரக ஹோமங்களும் நடைபெற்றது.

மேலும் இந்த மஹா சண்டி ஹோமத்தில் உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்திட வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட நவதானியங்கள் கொண்டு யாக பூஜைகள் சிவச்சாரியர்கள் மூலம் நடைபெற்றது,

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் கருவறையில் விற்றிருக்கும் 
ஶ்ரீ கனகா துர்கா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் திருமதி சுஜாதா பத்மநாபா தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில்  ஸ்ரீ கனகா துர்கா தேவி அம்மனுக்கு அலங்கார பூஜைகளும், கற்பூரத் தீபாதாரணைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது,

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீ கனக துர்காதேவியை கர்நாடகா மாநிலம் பெங்களூர் மற்றும் ராயகோட்டை, கிருஷ்ணகிரி, பூவத்தி, பாலகுறி, கெங்ககேரி, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர், இதனை அடுத்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ