தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கம் சார்பில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கம் சார்பில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.!

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கம் சார்பில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் குடும்பத்துடன் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் திம்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மாநில தலைவர் பாலசுப்பிரமணி, மாநில செயலாளர் மகாதேவன், மாநில செயலாளர் செந்தில்நாதன், மாநில பொருளாளர் தமிழ், மாநில துணைத்தலைவர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கோரிக்கையில் வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தர்ணாப் போராட்டத்தின் போது 
சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி கோட்ட பொறியாளரை சந்திக்க வந்த நிர்வாகிகளை மிரட்டிய கோட்ட பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், 

சாலைப்பணியாளார்களின் பொது சேம நல நிதி கணக்கில் முன் பணம் கோரி விண்ணப்பம் செய்பவர்களிடம் லஞ்சம்  கேட்பதை தடுக்க வேண்டும்,  சாலைப் பணியாளர்கள் சாலைப் பணிகள் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு வழங்க வேண்டிய மண்வெட்டி, கடப்பாறை கை உறை, அரிவாள் போன்ற கருவிகள் வழங்க வேண்டும் 

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ