பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு.!

தென்காசி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு.!

சென்னையில் அமைச்சர் கே என் நேருவிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் மனு

தென்காசி ஏப் 24

தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே.என் நேருவிடம்  தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனுவினை வழங்கினார் அந்த மனுவில் தென்காசி சட்டமன்ற தொகுதி மேலகரம் பேரூராட்சி 11 வது வார்டில்  பார்க் தெருவில் கலைஞர் படிப்பகம் அமைத்திட இரண்டு செண்டு நிலம் உள்ளது அதில் தரைத்தளத்தில் வாசகசாலையும், முதல் தளத்தில் கலைஞர் படிப்பகம் அமைத்திடவும்,
மற்றும் 11 வது வார்டு அன்பு நகரில் மகளிர் உடற்பயிற்சி கூடம் அமைத்திடவும்
மேலும் 11 வது வார்டில் அம்மன் நகர் அன்பு நகர் இசக்கியம்மன் நகர் போன்ற பகுதிகளில் மண் சாலை இருக்கிறது அதனை தார்சாலையாக அமைத்திடவும் கழிவு நீர் ஓடை அமைத்திடவும் அதே பகுதியில் கலைஞர் பூங்கா அமைத்து திடவும்அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் சங்கர்   கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் அமைச்சரிடம் இந்த  மனுவை வழங்கினர்.மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்  உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


நிகழ்வின் போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் காசி தர்மம் துரை மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்