கிளாங்காடு ஊராட்சியில் தூய்மை சேவை -2025. .!

தென்காசி

கிளாங்காடு ஊராட்சியில் தூய்மை சேவை -2025. .!

கிளாங்காடு ஊராட்சியில் தூய்மை சேவை -2025 

திட்ட இயக்குனர் துவக்கி வைத்தார்.

தென்காசி, செப் - 18

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில்
தூய்மையே சேவை 2025 - திட்டத்தை திட்ட இயக்குனர் துவக்கி வைத்தார்.

 செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தூய்மையே சேவை -2025 என்ற புதிய திட்டம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தென்காசி மாவட்ட திட்ட இயக்குனர் டாக்டர் ஆர்.தண்டபாணி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு  செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கா.முருகேசன்
கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கொ.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந் நிகழ்ச்சியில் 
கிளாங்காடு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் , சீருடைகள், மழை கோட் வழங்கும் நிகழ்ச்சியும், 

அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மஞ்சப்பை பயன் படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் குப்பைகளை தரம் பிரித்துவழங்குதல் ,
மரக்கன்று நடுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட திட்ட இயக்குனர் டாக்டர் ஆர் தண்டபாணி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் 
தூய்மை பாரத் திட்ட இயக்க மாவட்ட திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பெ.தர்மராஜ்,  மாவட்ட திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் டேவிட் ஜாஸ்பர், 
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக், கிளாங்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், கிளாங்காடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கரடிமுத்து, ராஜசேகர்,  ராஜம்மாள்,  மீனா, கலா,  மகேஸ்வரி,  இசக்கியம்மாள், கண்ணம்மாள் மற்றும் தன்னார்வலர்கள்,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளாங்காடு ஊராட்சி செயலாளர் சமுத்திரம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்