SIR வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பிஎல் 2 மற்றும் வார்டு செயலாளர்கள் சம்பந்தமான BLC விளக்கக் கூட்டம் .!

தென்காசி

SIR வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பிஎல் 2 மற்றும் வார்டு செயலாளர்கள் சம்பந்தமான BLC விளக்கக் கூட்டம் .!

SIR வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பிஎல் 2 மற்றும் வார்டு செயலாளர்கள் சம்பந்தமான BLC விளக்கக் கூட்டம்

தென்காசி அக் 06

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் ஆணையின் படி, தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூர் திமுக சார்பில் குற்றாலம் பரணி லாட்ஜில் வைத்து எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு 
பிஎல் 2 மற்றும் வார்டு செயலாளர்கள் சம்பந்தமான BLC விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு குற்றாலம்  பேரூர் திமுக செயலாளர் சங்கர் என்ற குட்டி தலைமை வகித்தார். அவைத்தலைவர் மாடசாமி பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிஎல் 2 குற்றாலம் பேரூர் திமுக துணைச் செயலாளர் மாரியப்பன், ப எல் 2 ஐந்தாவது வார்டு செயலாளர் சக்திஸ் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குற்றாலம் பேரூர் திமுக பாக முகவர்கள் மேற்பார்வையாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், வழக்கறிஞர் கிரிஜா ஆகியோர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமான விளக்கங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

இந் நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் பால்ராஜ், சுரேஷ், வள்ளிநாயகம், முத்துக்குமார், ஆனந்த நாராயணன், வர்த்தக அணி அமைப்பாளர் சுப்புராஜ், பேரூர் சுற்றுச்சூழல் அணி  அமைப்பாளர் ஜெய்சங்கர், திமுக இளைஞரணி கருப்பசாமி, மாரிமுத்து, மனோ, கலை இலக்கிய அணி பண்டார சிவன், தொழிலாளர் அணி குத்தாலிங்கம், தொழிலாளர் விவசாய அணி முத்துக்குமார், ஒன்றிய பிரதிநிதி திருமலைக்குமார் .
உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்