கிருஷ்ணகிரியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கிருஷ்ணகிரி முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கிருஷ்ணகிரி முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டார்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் செல்லக்குமார் தேர்தல் கமிஷன் உண்மை தன்மையுடைய நியாயமான தேர்தல் கமிஷனாக பணியாற்றாமல் பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலியாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூரன்குட்டை, அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கிருஷ்ணகிரி முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத்துணைத் தலைவர் பி.சி. சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நிகழ்சியில் கலந்துக் கொண்ட பின்னர்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் செல்லக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்.... 
பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு திருட்டை நமது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு நாடு முழுவதும் வாக்கு திருட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது,

குறிப்பாக 2024-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலானாலும் சரி,  அதன் பின்னர் நடந்த மஹாராஸ்டிரா, அரியானா ஆகிய சட்ட மன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அந்த தேர்தல்கள் எல்லாமே வாக்கு திருட்டு மூலமமாக தேர்தல் கமிஷனும், பாரதிய ஜனதாவும் கை சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தடுத்து வெற்றியை பெற்றுள்ளனர். 

இந்த தேர்தல்களில் தேர்தல்கமிஷன் உண்மை தன்மையுடைய நியாயமான தேர்தல் கமிஷனாக பணியாற்றாமல் பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலியாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்களான சேகர், விவேகாநந்தன், ராமன், முன்னாள் மாவட்டத் தலைவர் காசிலிங்கம், வட்டாரத் தலைவர்கள் சூளகிரி கிருஷ்ணமூர்த்தி, தனஞ்செயன், சுந்தராஜன், சேவாதள மாவட்டத் தலைவர் தேவராஜன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அணில்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்னேஷ், முன்னாள் குரும்பூர் சேர்மன் முருகேசன், முன்னாள் நகர தலைவர் வின்செண்ட், தொகுதி பொறுப்பாளர் டிட்டர் வடிவேல் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அசோகன், ராஜ்குமார், பாண்டு, ஹரி, கமலகண்ணன், சத்தி வேல், ஹரிஸ், சதிஷ்குமார், அயோத்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ