சிவகிரியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் .!
தென்காசி

சிவகிரியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்
தென்காசி மாவட்ட காங்கிரஸ் OBC மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பாக, தேர்தல் ஆணையமும் பாசிச பாஜக மோடி அரசும் இணைந்து நடத்திய வாக்கு திருட்டை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி நாடார் எம் எல் ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில ஓபிசி செயல் தலைவர் வழக்கறிஞர் காமராஜ் கலந்து கொண்டார். மாவட்ட ஓபிசி தலைவர் திருஞானம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் PCC உறுப்பினர்கள் சட்டநாதன் சங்கை கணேசன் நாகராஜ் மணிகண்டன் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல் புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் வட்டார தலைவர்கள் கதிரவன், மகேந்திரன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தாயார் தோப்பு இராமர் நிர்வாகிகள் ரமேஷ் சுரேஷ், KTC நகர் அசர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் நன்றி கூறினார்... முடிவில் கரூர் துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்