"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாம் .!

கிருஷ்ணகிரி

"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 2,212 நபர்கள் பதிவு செய்து மருத்துவ சிகிச்சை பெற்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ