வேப்பனஹள்ளி அருகே உள்ள அரியானப்பள்ளியில் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவெக கட்சியில் இணைந்தனர்.!

த வெ க

வேப்பனஹள்ளி அருகே உள்ள அரியானப்பள்ளியில் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவெக கட்சியில் இணைந்தனர்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள அரியானப்பள்ளியில் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவெக கட்சியில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கழகச் செயலாளர்                        சுரேஷ் தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள் தவெக கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.

வேப்பனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரியானப்பள்ளி கிராமத்தில் வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர்  நாகராஜன் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வேந்தர்க்கரசன் (எ) வடிவேல் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சுரேஷ் தலைமையில் அரியானப்பள்ளி அடுத்த இருளர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவெக கட்சியில் இணைந்தனர்

இந்த இணையும் விழாவில் இணையும் விழா நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் இந்திரா, தனலட்சுமி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளர் அஸ்வத், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ரமேஷ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருகேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வாசு  மற்றும்‌ மாவட்ட தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர்கள் ராகுல், ராகவன், கழக நிர்வாகிகள் தொழிலதிபர் சலீம் பாஷா. முஜீப் பாஷா, கார்த்திக் பாபு, பாப்பண்ணா,கோவிந்தன், அசோக், சதீஷ், ஸ்ரீராம்,ரமேஷ், மஞ்சுநாதா  மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ