நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தார்சாலை பணிகளுக்கு பூமி பூஜை.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி முதல் அரியனப்பள்ளி வரை நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 72 இலட்சம் மதிப்பில் தார்சாலை பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைக்கப்பட்டன.

உடன், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன், உதவி பொறியாளர் ரேணுகா தேவி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
