ஓபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கிய சசிகலா.. துரோகிகளுக்கு போடியில் இடமில்லை.!

சசிகலா

ஓபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கிய சசிகலா.. துரோகிகளுக்கு போடியில் இடமில்லை.!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சசிகலா ராமதாஸின் பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த நிலையில், அவர்கள் போட்டியிடும் 64 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் சசிகலாவின் அஇபுதமமுக போடி வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது சசிகலா பேசியதாவது, நான் எதற்கும் ஆசைப்படாத ஆள். என் பக்கம் நியாயம் இருக்கிறது, ஒரு வீட்டில் தண்ணீர் குடித்தால் கூட அவர்களை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். அதனால்தான் ஜெயலலிதாவுக்கு கஷ்டம் வந்தபோது அவர்களுடன் கூடவே பயணித்திருக்கிறேன். அவருடன் முதல்வராக இருந்த போதும் உடன் இருந்திருக்கிறேன்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு சசிகலா சவால்

உண்மையான கட்சி விசுவாசம் இருந்தால் யாரும் பன்னீர்செல்வம் போன்று முடிவெடுக்க மாட்டார்கள். இந்த தொகுதியில் ஏன் பேசுகிறேன் என்றால் இந்த தொகுதியில் தான் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நாங்களும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் எங்களுக்கு பணி செய்தவர் எங்களுக்கு நன்றி கடன் உண்டு. அதனால் அவரை நிறுத்தி இருக்கிறோம்.

நீங்களா, எங்கள் வேட்பாளரா என்பதை பார்ப்போம். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். ஏனென்றால் அவரிடம் தர்மம் நியாயம் இருக்கிறது. யார் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் எல்லாம் உங்களின் பணம் தான். ஆனால் விசுவாசத்திற்கு உண்மைக்கு மட்டும் உங்கள் மனதை வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற ஆட்களுக்கெல்லாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. அரசு வருவாய் அல்லாமல் செலவு எப்படி செய்ய முடியும்? ஒவ்வொரு வீட்டிலும் சென்று உண்டியல் கொடுக்கவா போகிறீர்கள்? அடுத்து கடன் வாங்க சென்று விடுவீர்கள்?

இபிஎஸ், ஸ்டாலின் ஏமாற்றுகிறார்கள்

எடப்பாடி பழனிச்சாமியும் ஸ்டாலினும் செய்ய முடியாததை ஏன் மக்களிடம் சொல்கிறீர்கள்? நான் பத்தாயிரம் தருவேன் என்று சொல்வது உங்களிடம் மாதம் பத்தாயிரம் வாங்குவதற்காக தான் எனவே ஏமாற்றி ஓட்டுகளை வாங்கலாம் என நினைக்கிறார்கள். நான் இவர்களை என்ன செய்வது? எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்? வேலை வாய்ப்பு கொடுத்து இருபதாயிரம் சம்பளம் கொடுப்பேன் என்று உத்தரவாதம் கொடு. கொடுக்க மாட்டீர்கள். அந்தப் பெண் பிள்ளை ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதித்து விடும்.

துரோகிகளுக்கு போடியில் இடமில்லை

இங்கே நிறுத்தி இருக்கிற நமது கூட்டணி கட்சி வேட்பாளர் பத்மநாபனுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். துரோகத்திற்கு போடியில் இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். யாரிடமும் ஏதும் பேச வேண்டாம், திட்ட வேண்டாம், எதுவும் சொல்ல வேண்டாம், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். எம்ஜிஆர் மறைவிற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் புறா சின்னத்தில் இருந்தார், அம்மாவுடன் நாங்கள் சேவல் சின்னத்தில் இருந்தோம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் புறா சின்னத்திற்கு வேலை செய்தார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஜானகி அம்மாவை ஒன்று சேர்த்த பின் கட்சிக்கு வருகிறார்.

ஓபிஎஸ்-க்கு திமுக தாய்கலகமா?

ஓ பன்னீர்செல்வம். முதல்வர் வரை உயரிய பதவி கட்சியில் கொடுக்கப்பட்ட பின்பும் இதுபோல் ஒரு முடிவெடுக்க வேண்டுமா? ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? எனக்கு அம்மாவுக்கு சிறை தண்டனை தந்த கட்சியில் போய் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அதை தாய்க்கலகம் என்று எப்படி சொல்லலாம்? தலைவரை தூக்கி எறிந்த கட்சி அந்த திமுக. ஜெயலலிதா மேல் வழக்கு போட்ட கட்சி அந்த திமுக. அதை மறந்துவிட்டு தாய்க் கழகத்தில் போய் சேர்வது என்று சொல்வது எப்படி நியாயம் என்றார்.