பா.ஜ.க வை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை.! அதனால் தான் கூட்டணி வைத்தோம் - முன்னால் அமைச்சர் பொன்னையன்.!

அதிமுக

பா.ஜ.க வை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை.! அதனால் தான் கூட்டணி வைத்தோம் - முன்னால் அமைச்சர் பொன்னையன்.!

12 ஆண்டுகால ஆட்சியில் இருக்கும் பாஜக - வை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. அதனால் தான் பாஜக - வுடன் கூட்டணி வைத்தோம் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், "2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. தனி ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு கண்டிப்பாக எடப்பாடி தலைமையில் 2026 ஆண்டு அண்ணாவின் ஆட்சி, எம்ஜிஆரின் ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். அதிமுகவில் தவெக கட்சி இணைவது பற்றி கருத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக அமோக வெற்றி பெற்று இரட்டை இலை ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு எடப்பாடி முதலமைச்சர் ஆக வருவார்.

பாஜகவுக்கும் அதிமுகவிற்கும் உறவு நல் உறவு, வெற்றி உறவு. 2026ல் எடப்பாடி முதலமைச்சராக கூடிய அற்புதமான நல்ல உறவு தான் பாஜக கூட்டணி உறவு. வெள்ளைக்காரன் ஆண்டார்கள் அதற்கு பின் முஸ்லிம்கள் ஆண்டார்கள், அதற்கு பிறகு காங்கிரஸ், தற்பொழுது பாஜக 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்கள். அவர்களை ஆட்ட முடியவில்லை, அசைக்க முடியவில்லை. அதனால்தான் அவர்களுடன் கூட்டணி வைத்தோம். சிறுபான்மை மக்களின் வாக்கு அதிமுகவுக்குதான் இருக்கும். அது அவர்களிடம் கேட்டாலே அவர்கள் கட்டாயமாக எங்களுக்கு சாதகமாகமான பதிலை கூறுவர். ஓபிஎஸ் செல்லா காசு அவரைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள். எடப்பாடி ஆட்சி காலத்தில் 15 ஆயிரம் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தினார்கள். ஆனால் இப்பொழுது 15000 வருகிறது, 40,000 செலவு செய்கிறார்கள். வீட்டை விற்று மக்கள் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலை மாறும். எடப்பாடியின் அற்புதமான பொற்கால ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் மலரும் சிறப்பாக மலரும். மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.