தைப்பூச திருநாளை முன்னிட்டு தமிழில் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி. !
தை பூசம்
தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மாநிலம் முழுவதிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் அலைமோதுகின்றனர்.
பால்குடம், காவடி, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களுடன் பக்தர்கள் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மறுதமலை உள்ளிட்ட அறுபடை வீடுகள் மட்டுமின்றி, மற்ற முருகன் கோயில்களிலும் கணிசமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்தப் புனித நாளில் தமிழகமெங்கும் மகிழ்ச்சியும் பக்தி உணர்வும் நிறைந்துள்ளது.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுப் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழில் சிறப்பான வாழ்த்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) இல் அவர் வெளியிட்ட பதிவில், முருகப் பெருமானின் அருளை வேண்டி, அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி, வளம் நிறைந்த வாழ்க்கையை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
