முதியோர் காப்பகத்தினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் .!

கிருஷ்ணகிரி

முதியோர் காப்பகத்தினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் .!

கிருஷ்ணகிரியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக துவங்கப்பட்டுள்ள முதியோர் காப்பகத்தினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அஸ்டலட்சுமி கொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.

அஷ்ட லட்சுமி கொண்டு நிறுவனத்தின் சார்பில் வயதான காலத்தில் கவனிக்கப்படாமல் அவதிப்படும் முதியோர்கள், யாரும் இல்லாமல் வயதான காலத்தில் அவதிப்படும் முதியோர்கள் மற்றும் பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு வாழ்வு கொடுத்து அவர்களை அரவணைத்து கடைசி காலம் வரை சந்தோஷமாக கழித்திடும் வகையில்  புதியதாக துவங்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான திருமதி புஸ்பா கிருஷ்ணன் தலையில் நடைபெற்ற இந்த ஆதரவற்ற முதியோர் தொண்டு நிறுவனத்தை பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்தினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அஞ்சூர் நாகராஜ், கோவிந்தசாமி, ஒன்றிய  திமுக செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர்கள் அஸ்லம், வேல்மணி, மற்றும் திமுக கட்சியை சேர்ந்த சரவணன், சீனிவாசன், கோவிந்தராஜ், மணிகண்டன், சக்திவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

.

செய்தியாளர் 

மாருதி மனோ