தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1000 கிலோ எடையிலான அனைத்து பழ வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம்..!
ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1000 கிலோ எடையிலான அனைத்து பழ வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை MBT சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில் நேற்று சித்திரை மாத தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு காலையில் மூலவர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், அரிசிமாவு, தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மங்கள தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
.
அதனைத்தொடர்ந்து பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு சுமார் 1000 கிலோ எடை கொண்ட அனைத்து பழங்களை கொண்டு சிறப்பு விசுகனி அலங்காரம் செய்யப்பட்டது அதோடு இல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மூலவர் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ததோடு கனிகளால் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
செய்தியாளர்
அருளரசன்