கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.!
தென்காசி

தென்காசியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
தென்காசி ஏப் 15
தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்து நடத்திய பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் வைத்து நடை பெற்றது. இந்த
போட்டியை நிறைவு செய்யும் விதமாக வீரர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக இந்திரகுமார் பி சி சி ஐ லெவல் 2 கோச் பங்கேற்று சிறப்புரை
ஆற்றினார்.
வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீர வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் செயலாளர் ஸ்ரீநாத் ராமன் வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்