தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் நினைவு தினம் .!
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் நினைவு தினம்
தென்காசி ஆகஸ்ட் 07
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் வைத்து முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வைத்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் கலை கதிரவன், மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, தமிழ்ச்செல்வன், கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசு ராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம் ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, சாமித்துரை, ஒன்றிய செயலாளர்கள் பொன் செல்வன், ரமேஷ், அழகு சுந்தரம், ஜெயா ஐயப்பன், ஷேக் முகமது, நகர செயலாளர் சாதிர், பேரூர் செயலாளர்கள் சங்கர் என்ற குட்டி, சுடலை, முத்தையா, பண்டாரம், சார்பு அணி அமைப்பாளர்கள் இஞ்சி இஸ்மாயில், பொன் அறிவழகன், செல்வகுமார், அழகு தமிழ்சங்கர் மற்றும் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்புஅணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்