தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் - மனோஜ் பாண்டியன் சந்திப்பு.!
தென்காசி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் - மனோஜ் பாண்டியன் சந்திப்பு
தென்காசி, நவ - 08
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார. இந்நிலையில் நேற்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மற்றும் திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவர் மறைந்த பி எச் பாண்டியன் மகனும், ஆலங்குளம் தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான பி.எச்.மனோஜ் பாண்டியன் சமீப காலமாக ஓபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த பி.எச்.மனோஜ் பாண்டியன் கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அதன்படி நேற்று மாலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலனை தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன் திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி, தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன், கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், தமிழ்ச்செல்வி, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ் அலி, கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் கீழப்புலியூர் சே.தங்கப்பாண்டியன், கரிசல் வேலுச்சாமி பாண்டியன், மேலகரம் பேரூர் திமுக செயலாளர் இ.சுடலை, மற்றும் திமுக நிர்வாகிகள் கஜேந்திரன், ராம்ராஜ், அறங்காவலர் அழகப்பபுரம் வே.கணேசன், வல்லம் செல்வம், மகளிர் அணி சோபனா ராணி, மம்தாள், பிரேம்குமார், முத்து சுப்பிரமணியன், ஐயப்பன், ஊர்மேலழகியான் கருப்பண்ணன், அறங்காவலர் சுந்தர்ராஜ், ஆகியோர் கலந்துகொண்டு திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முடிவில் பி.எச்.மனோஜ் பாண்டியன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்
