செங்கோட்டையில் முன்னாள் பிரதமர் நேரு 136 வது பிறந்த நாள் விழா .!
தென்காசி
செங்கோட்டையில் முன்னாள் பிரதமர் நேரு 136 வது பிறந்த நாள் விழா
தென்காசி, நவ - 15
தென்காசி மாவட்டம்,
செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
செங்கோட்டை மேலபஜார் காந்தி சிலை முன்பு வைத்து நகர காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு 136-வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமையில், ஜவஹர்லால் நேருவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ப்பட்டது.
பின்னர் அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் முருகையா தென்காசி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் .ராஜீவ் காந்தி, நிர்வாகிகள் முகம்மதுசர்புதீன், திவான்ஒலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்
AGM கணேசன்
