36 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,04,851/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.!
தென்காசி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செவித் திறன் குறை பாடுடைய 25 மாற்றுத் திறனாளி களுக்கு தலா ரூ.3285/- வீதம் ரூ82,125 மதிப்பிலான காதொலி கருவிகளையும், பார்வைத்திறன் குறைபாடுடைய 11 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.2066 /- வீதம் ரூ.22,726 /- மதிப்பிலான ப்ரெய்லி கை கடிகாரங்களையும் ஆக மொத்தம் 36 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,04,851/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
