தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா.!

தென்காசி

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா.!

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா

மாநில தலைவர் பங்கேற்பு

தென்காசி செப் 21

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா இன்று நடை பெற்றது.
வ உ சி 154 வது ஆண்டு பிறந்த தின விழா, தென்காசி மாவட்டத்தின் 40 வது ஆண்டு விழா மற்றும் சமுதாய மாணவர்களுக்கு  பரிசளிப்பு மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா என முப்பெரும் விழா தென்காசி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது.

சங்க கொடியினை மாநில தலைவர் சொக்கலிங்கம் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு
மாநில இணை பொதுச் செயலாளர் ஆடிட்டர் நாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கனகசபாபதி, மாநில பொருளாளர் செண்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்கள் அருணா சுப்பிரமணியன், முத்து கணபதி என்ற சுகந்தி, கல்யாணி பரமசிவன்,மாவட்ட மகளிர் அணி தலைவி சுப்புலட்சுமி செண்பகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாவட்டச் செயலாளர் நாகராஜன் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். வரவு செலவு கணக்கு விபரங்களை மாநில துணை பொதுச் செயலாளர் சங்கரநாராயணன் வாசித்தார். சுப்பிரமணியன் வ உ சி யின் படத்தினை திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அன்னை சண்முகம், கோவை சுரேஷ், பெரிய லாலா மாரியப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் சிவசங்கர், மாநில இளைஞரணி தலைவர் குற்றாலிங்கம், செயலாளர் பொதிகை கண்ணன், மாநில இலக்கிய அணி அமைப்பாளர் சிவஞானம்,மாவட்ட இளைஞரணி தலைவர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநிலத் தலைவர் சொக்கலிங்கம் சிறப்புரை
ஆற்றினார்.

மாவட்ட அமைப்புச் செயலாளர் எம். அய்யம் பெருமாள் பிள்ளை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர். இதில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கினர். முடிவில் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்