கிருஷ்ணகிரியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக் கொண்ட மிலாது நபி விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக் கொண்ட மிலாது நபி விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் MLA விற்கு தேதிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திர மோகன் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக் கொண்ட மிலாது நபி விழா நடைபெற்றது. நவ்ஜவான் கமிட்டி மற்றும் மொஹல்லாவாசிகள் இணைந்து நடத்திய இந்த மிலாது நபி விழாவில் சாதி மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மதத்தினர்களும் கலந்து கொண்டனர்.
நகர திமுக இளைஞர் அணி தலைவர் அஸ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு த.மு.மு.க மாவட்ட தலைவர் நூர் முஹம்மத், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மாவட்ட தலைவர் முஹம்மத் உமர், பூரா மஸ்ஜீத் உவேஸ் அஹமத், ரியாசுத்தீன் சிக்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ்ரத் மௌலான அப்தூல் கரீம் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் கொள்கைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்,
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்.
அப்போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த எம்பெருமான் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது மட்டுமின்றி அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு போதித்த கொள்கைகளை தமிழக திராவிட மாடல் அரசு பின்பற்றி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்த விழாவில் கலந்துக் கொண்ட தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி மதரஷா பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் இந்த விழாவில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேல்மணி உள்ளிட்ட மிலாது நபி விழாக்குழுவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
இந்த விழாவினைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரியாணி உணவும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ