தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பாகம் - 3
சட்டம்

2 ஆம் பாக தொடர்ச்சி.....
அதே நேரத்தில், அலுவல் சார் ரகசியங்கள் சட்டம் 1923 ( Official Secrets Act 1923 ) - ன் படி விலக்களிக்கப்பட்ட தகவல்களை பொது நலனுக்காக பெறலாம்.
ஆனாலும் சில தகவல்கள், விண்ணப்ப தேதிக்கு 20 ஆண்டுகள் முன்னர் நிகழ்ந்த, நடந்த, ஏற்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய தகவல்களையும் பெற முடியும்.
அது தவிர ஒரு நபரிடம் இருக்கும் பதிப்புரிமையை ( Copyright ) மீறக்கூடியதாக இருக்கும்பட்சத்தில், அந்த தகவலைப் பெற முடியாது ( பிரிவு 9 )
மூன்றாம் தரப்பினர் தகவல் ( பிரிவு 11 ) Third Party information
1.மூன்றாம் தரப்பினர் தொடர்புடைய அல்லது அவரால் அளிக்கப்பட்டிருப்பதாக மற்றும் அவரால் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகக் கருதபட்டாலோ அந்தத் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 5₹ நாள்களுக்குள், மத்திய அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலர், சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினரை முறையீடு செய்வதற்கு அழைப்பு விடுத்து, அவர்களின் கருத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
மூன்றாம் தரப்பினரின் வியாபார அல்லது வணிக ரகசியங்கள் தவிர, பிற தகவல்களைப் பொதுநலனைக் கருத்தில் கொண்டு வெளிப்படுத்தலாம்.
2. மூன்றாம் தரப்பினரின் தகவல்களை கேட்டு விண்ணப்பம் வரப் பெற்றுருக்கிறது என்று தகவலை மூன்றாம் தரப்பினருக்குத் தெரிவித்து, அவர்களின் முறையீட்டைப் பெற பத்து நாட்கள் அவகாசம் தரப்படும்.
3. மூன்றாம் தரப்பினர் தொடர்பான தகவலைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற முடிவு, விண்ணப்ம் பெற்ற 40 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.
தொடரும்
Please subscribe YouTube
https://youtube.com/@newstodaytamil-e1y?si=CHKoTc2obU3bKfjD
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாகம் -2
https://www.newstodaytamil.com/The-right-to-get-information-Act---2005-Part---2
மு.ர.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )