ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள வாழும் கோட்டை.! ஒரு பார்வை.!

வரலாறு

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள வாழும் கோட்டை.! ஒரு பார்வை.!

இந்தியா பல அரசர்கள் மற்றும் மகாராஜாக்களால் ஆளப்பட்ட ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதனால்தான் நாடெங்கிலும் பெரிய மற்றும் சிறிய கோட்டைகளை பார்க்க முடிகிறது.

இன்று இந்த கோட்டைகளில் பல தேசிய பாரம்பரிய சின்னங்களாக மாறிவிட்டன. இந்த கோட்டைகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றாலோ, அதனுள்ளே நுழைவதற்கோ தற்போது டிக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. ஏனென்றால் இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாக்க அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்றன.

இருப்பினும், இன்னும் சில தனித்துவமான கோட்டைகள் இந்தியாவில் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வாடகையின்றி வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்கு குடியிருப்பவர்கள் பின்பற்றும் சில வினோதமான மரபுகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. குறிப்பாக இவர்கள் திருமண சடங்கின்போது, பாரம்பரியமான திருமண அழைப்பிதழ்களை விநியோகிப்பதோடு, கோட்டையின் சுவர்களில் திருமண அழைப்பிதழ்களை ஓவியமாக வரையவும் செய்கின்றனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனர் ஷிவாங்கி கண்ணா என்பவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் அமைந்துள்ள இந்தியாவின் ஒரே வாழும் கோட்டையை அவர் காட்சிப்படுத்தியுள்ளார். சோனார் கோட்டை (தங்கக் கோட்டை) என்று அழைக்கப்படும் இந்தக் கோட்டை சுமார் 4,000 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் யாரும் எந்தவித வாடகையும் செலுத்தாமல் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த கோட்டை குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்று தலமாக உள்ளது.

சுவர்களில் திருமண அழைப்பிதழ்கள்

ஷிவாங்கி தனது வீடியோவில் இந்தக் கோட்டையைப் பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று வீட்டுச் சுவர்களில் திருமண அழைப்பிதழ்களை வரைவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உதாரணமாக, திருமண விவரங்களுடன் விநாயகப் பெருமானின் வர்ணம் பூசப்பட்ட சித்தரிப்பு, அதைக் காணும் எவரையும் திருமணக் கொண்டாட்டத்தில் சேர அழைக்கிறது.

வீடு தீப்பிடித்தாலும் அந்த புகைப்படத்தை பாதுகாக்க வேண்டுமாம்...வடகொரிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...!

ஜெய்சால்மர், அனைவராலும் கோல்டன் சிட்டி என்று குறிப்பிடப்படுகிறது. இந்நகரம் அதன் அற்புதமான மணற்கல் கட்டடக் கலைக்கு பிரபலமானது. 1156-ம் ஆண்டு ராவல் ஜெய்சால் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கோட்டையானது, இப்பகுதியின் வளமான வரலாற்றின் உயிருள்ள சான்றாக இன்று வரை நிலைத்துள்ளது.