என்றென்றும் அழியாத பொக்கிஷங்களை பாதுகாப்போம்

என்றென்றும் அழியாத பொக்கிஷங்களை பாதுகாப்போம்

1967 - களுக்கு முன்பு பேருந்துகளில் மிகவும் சிறந்த பேருந்து பாடி கட்டும் நிறுவனம் கும்பகோணத்தை சேர்ந்த எஸ் ஆர் வீ எஸ் பாடி தான்.

அந்த கம்பெனி தான் எவர்சில்வர் தகடு நிக்கல் கோட்டிங் கொடுத்து மிக அழகான முன் கண்ணாடி, சைடு கண்ணாடிகள் வைத்து பேருந்து பாடிகளை கட்டியுள்ளனர்.

அதனுடைய சொகுசு அதனுடைய அழகு மிகவும் பிரசித்தி பெற்றது என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.

அதன் பிறகு தான் பெங்களூர் பாடிகள் வந்தன. திருவள்ளுவர் பஸ் பாடி நாகர்கோவில் கட்டப்பட்டது. அந்த பஸ் பாடி மிக நீளமாக இருக்கும் சீட்டுகள் நிலையாக இருக்கும் அமர்ந்து செல்ல மிக அருமையாக இருக்கும். 

அதைவிட சிறப்பாக கும்பகோணம் எஸ் ஆர் வி எஸ் பாடியிருக்கும் அதற்கு அடுத்து சென்னையில் பஸ் பாடி கட்டப்பட்டது.

அந்த கம்பெனி தான் பேருந்து முழுவதுமே இரும்பால் கட்டியது.

மற்ற மாவட்டங்களில் டிவிஎஸ் பஸ் கம்பெனி புதுக்கோட்டையில் பஸ் பாடி கட்டியது இரும்பும், மரமும் கலந்து கட்டியுள்ளார்கள் டிவிஎஸ் பேருந்து பாடிகளை.

அதன் பிறகு கரூரில் எல் ஜி பி பஸ் பாடி வந்தது.

பின்னர் கோயம்புத்தூர் ஏபிடி பஸ் பாடி சிறப்பாக இருக்கும்.

இது எல்லாம் தாண்டி பொரையாறில் சக்தி விலாஸ் பஸ் களுக்கு என்று மிக மிக சிறப்பாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

அது ஒரு பொற்காலம் 

பழைய நினைவுகள் என்றும் அழியாதவை