திண்டுகல்லில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 ஆவது பிறந்த தின விழா கொண்டாட்டம்

திண்டுகல்லில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 ஆவது பிறந்த தின விழா கொண்டாட்டம்

ஆத்தூர் -சித்தையன் கோட்டைபேரூர் கழகம் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் முகமது ரபிக் தலைமையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 ஆவது பிறந்த தின விழா கொண்டாட்டம்               ‌                                               ‌                                                ‌

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி திமுக கழகம் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் முகமது ரபிக் தலைமையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 ஆவது பிறந்த தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சித்தையன் கோட்டை பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் முகமது ரபிக், சிறுவர், சிறுமியர் மாணவ -மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் எழுது கோல்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைவருக்கும் வழங்கினார்.

அதனையடுத்து நகரச் செயலாளர் சக்திவேல் உடன் இணைந்து ஏழை எளிய பெண்களுக்கு விலையில்லா சேலைகளையும் வழங்கினார்கள்.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உடன் சித்தையன் கோட்டை பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணை தலைவர் ஜாஹிர் உசேன், ரபீக் மைதீன், வக்கீல் மரக்காயர், சுரேஷ், முத்து, சௌந்திரபாண்டியன், சின்ன கோபால், முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

அழகர் சாமி