நத்தம் சந்தியாகப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.!

திண்டுக்கல்

நத்தம் சந்தியாகப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.!

நத்தம் சந்தியாகப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.    ‌                                                

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 786 காளைகள் 392 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தை மாதம் மற்றும் மாசி மாதங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம் இங்கு நடைபெறும் போட்டிகளை கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை மாவட்டம் தேனி. சிவகங்கை .திருச்சி கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் வளர்ப்பவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வது வழக்கம் இந்நிலையில் இன்று நத்தம் தொகுதிக்கு உட்பட்ட   புகையிலைப் பட்டியில் வருடா வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இந்த வருடமும் புனித சந்தியாகப்பர் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 786 காலைகளும் 392 மாடுபிடி வீரர்களும் களம் காண்கிறார்கள் மேலும் ஏ டி எஸ் பி தலை மேலான 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல் கால்நடை மருத்துவர்கள் குழு சுமார் 20க்கும் மேற்பட்டவர் காளைகளை பரிசோதனை செய்து வாடி வாசலுக்கு அனுப்பி வருகின்றனர் மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தால் உடனடி சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது

அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தங்க காசு வெள்ளி காசு பீரோ கட்டில் பட்டுச்சேலை அண்டா பானை சைக்கிள் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கினர்

மேலும் கோட்டாட்சியர் துவக்கி வைத்த போட்டியானது தற்போது நிறைபெற்றது. இதில் ஒரு காவலர் உட்பட 34 பேர் காயம் அடைந்து குறிப்பிடத்தக்கது . மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தியாளர் 

அழகர் சாமி