மாணவர்களுக்கான தொழில்நுட்ப  தயார் நிலை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்தும் ஒரு நாள் பயிற்சி பட்டறை .!

திண்டுக்கல்

மாணவர்களுக்கான தொழில்நுட்ப  தயார் நிலை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்தும் ஒரு நாள் பயிற்சி பட்டறை .!

சின்னாளப்பட்டி - காந்திகிராம நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தொழில்நுட்ப  தயார் நிலை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்தும் ஒரு நாள் பயிற்சி பட்டறை                                          ‌                     ‌    ‌      

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் இன்ஸ்டிடியூஷனின் இன்னோவேஷன் கவுன்சில் (ஐஐசி)  மாணவர்களுக்கான தொழில்நுட்பத் தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பஞ்சநதம் நிகழ்ச்சியின் தலைமை உரையாற்றி புதுமையான தயாரிப்புகளை சமுதாயத்திற்கு கொண்டு வர மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் எனவும் இதன் மூலம் புதிய புதிய கண்டுபிடுப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  

மேலும், புதுடெல்லியின் கல்வி அமைச்சகம், புதுமைப்பிரிவு செல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் இன்ஸ்டிடியூஷனின் இன்னோவேஷன் கவுன்சில் செயல்பாடுகளுக்காக மூன்று நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றினை வழங்கினார்.  

இப் பயிற்சிப் பட்டறைக்கு காந்திகிராம கிராமிய  நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் வினோத் ஜெயராமன், CTO & இணை நிறுவனர் ரூம்பர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு மற்றும் குமாரவேலு, ஜியோஜிப்ராவில் கணித உள்ளடக்கத்தை உருவாக்கியவர், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், சென்னை, ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து  வேதியியல் துறையின் மூத்த பேராசிரியர்  மற்றும் ஐஐசி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி தொடக்க உரையை வழங்கினார்.

டீன் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் & டெக்னாலஜிஸ், ஐஐசி தலைவர் முனைவர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.    

மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஐஐசி உறுப்பினர்களான கணிதத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ராஜ்குமார், கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் கலைச்செல்வி மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் பால முரளி ஆகியோர் இப்பயிற்சி பட்டறையை ஒருங்கிணைப்பு செய்தனர்.

அழகர் சாமி