அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பாக வாக்காளர் உறுதிமொழி.!

கிருஷ்ணகிரி

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பாக வாக்காளர் உறுதிமொழி.!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பாக இன்றைய தினம் 25.01.2025 சனிக்கிழமை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும் துணை முதல்வர் மரு சாத்விக்கா அவர்கள் மருத்துவர் செல்வராஜ் மருத்துவர் ராஜா மருத்துவர் தினேஷ் ஆகியோர் முன்னிலையிலும் தேசிய வாக்காளர் உறுதி மொழியினை மருத்துவ கண்காணிப்பாளர் வாசிக்க மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் பணியாளர்கள் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அதேபோல கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மது, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கிருபாவதி ஆகியோர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

இந்நிகழ்வில் நிர்வாக அலுவலர்கள் சரவணன், தனலட்சுமி இளநிலை நிர்வாக அலுவலர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், கிறிஸ்டல் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.

மாருதி மனோ