1900 - ங்களில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்

1900 - ங்களில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்

124 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மிகவும் தூய்மையான சாலைகள், தலைப்பாகை கட்டிய சில மனிதர்கள், அருகே வால்டாக்ஸ் சாலை நெடுக மரங்கள், இடதுபுறம் அழகான மண்டபம், மண்டபத்திற்கு எதிரே ஒரு குதிரை வண்டி அதில் சில பயணிகள் என கண்களை கவரும் பழமையின் நேரடியான ஒரு காட்சி தான் இந்த புகைப்படம்.

இந்த புகைப்படம் எதிரில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பொது மருத்துவமனை மாடியில் இருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மருத்துவமனையின் கீழ்தள கட்டிட வளாகத்தின் ஒருபகுதி இந்த படத்தில் காட்சியளிக்கிறது.

பசுமையான சாலையில் வேறு வாகனங்கள் இல்லை, நெரிசல் இல்லை, மக்கள் கூட்டமும் இல்லை.

பகல் நேரத்தில் தான் இப்படி ஒரு அழகான காட்சி பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்த கால கட்டங்களில் ஆங்கிலேயர்களால் எடுக்கப்பட்ட புகைப்படமாக தான் இது இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இன்றளவும் எங்கு சென்றாலும் அதை காட்சிப்படுத்த கேமராக்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.