குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் முகமது அலியும்
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி 1980 இல் லாரி ஹோம்ஸிடம் தோற்றார்.
அப்போது குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 14 வயதான மைக் டைசன் மிகவும் வேதனை அடைந்தார்.
உடனே முகமது அலியுடன் தொலைபேசியில் பேசினார், உங்களை தோற்கடித்த லாரி ஹோம்ஸை பழிவாங்குவேன் என்று வீராவேசமாக கூறி உறுதியளித்தார். அதற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து மைக் டைசன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
கடுமையான அந்த போட்டியில் நான்கு சுற்றுகளில் லாரி ஹோம்ஸை வீழ்த்தினார். மைக் டைசன் பிற்காலத்தில் அந்த வெற்றியை தனது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சமாக கருதுவதாக பெருமையுடன் கூறினார்.
மைக்டைசன் மற்றும் முகமது அலி