பள்ளி மாணவர்களின் கோரிக்கைய ஏற்று புதிய கணிப்பொறி சாதனம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். எஸ.எஸ. பாலாஜி.!

செங்கல்பட்டு

பள்ளி மாணவர்களின் கோரிக்கைய ஏற்று புதிய கணிப்பொறி சாதனம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். எஸ.எஸ. பாலாஜி.!

பள்ளி மாணவர்களின் கோரிக்கைய ஏற்று புதிய கணிப்பொறி சாதனம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். எஸ.எஸ. பாலாஜி.! 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி பகுதியில் இயங்கிவருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு படிப்பதற்கு கணிப்பொறி தேவைப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டபேரவை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜியின் சீரிய முயற்சியினால் சுமார் 37 ஆயிரம் மதிப்பிலான புதிய கணிப்பொறி சாதனத்தை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்  மற்றும் கணினி ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்களை  திருப்போரூரில் அமைந்துள்ள சட்டபேரவை உறுப்பினர் அலுவலகம் வரவழைத்து புதிய கணிப்பொறி சாதனத்தை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். 

மேலும் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் தேவையிருந்தால் தனக்கு தெரியப்படுத்தவும் எனவும் அதனை உடனடியாக பூர்த்தி செய்து தருவதாகவும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக கணிப்பொறி இன்றி அவதிப்பட்டு வந்த சூழலில் தற்பொழுது மானாமதி பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் புதிய கணிப்பொறி கிடைத்ததற்கு அளவில்லா ஆனந்தம் அடைந்து சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்

  சுகுமாரன்