கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ஆம் தேதிகள்) ஆகிய மூன்று நாட்கள் தங்களது வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை பணிகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே கண்களில் கறுப்பு துணியைக் காட்டியவாறு பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

புதன்கிழமை பணிப் புறக்கணிப்புச் செய்து தங்களின் அவல வாழ்க்கையை கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களிடம் துண்டறிக்கை கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் ஆசிரியர்களின் தேவைகளை அறியுமாறு மாணவிகளின் முன்னாள் கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு முனைவர் ம. பழனி தலைமைத் தாங்கினார். முனைவர் த. அன்பழகன் முனைவர் சரிதா முனைவர் பழனியம்மாள் செல்வி ஆனந்தி திருமதி அர்ஷியா பஸ்ரின் திருமதி கவிதா திருமதி வாசுகி முனைவர் மனோன்மணி முனைவர் காமராஜ் முனைவர் அருணா முனைவர் உமாமகேஸ்வரி முனைவர் வரலட்சுமி முனைவர் சிவக்குமார் முனைவர் சுவாமிநாதன் முனைவர் சித்திக் ராஜா முனைவர் சுரேஷ் முனைவர் ஷகிலா முனைவர் மனோன்மணி முனைவர் பமீலா திருமதி கிருஷ்ணவேணி, திருமதி வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்
தமிழ்நாடு அரசு கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நியாயம் வழங்கும் வரை ஒவ்வொரு நாளும் இந்த போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடர் போராட்டமாக நடைபெறும்.
செய்தியாளர்
மாருதி மனோ
