துரை மார்டன் (சிபிஎஸ்இ) பள்ளியில்  முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.!

கிருஷ்ணகிரி

துரை மார்டன் (சிபிஎஸ்இ) பள்ளியில்  முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.!

துரை மார்டன் (சிபிஎஸ்இ) பள்ளியில் 
முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, ஜெகதேவி அடுத்த தண்ணீர்பள்ளத்தில் இயங்கி வரும்  துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மழலைய மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழா  மற்றும் தாத்தா, பாட்டி, தினம் கொண்டாடப்பட்டது.  

அதில் தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டு போட்டி வைத்து வெற்றி பெற்ற தாத்தா, பாட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  

மேலும் விளையாட்டு ஆண்டு விழா கொண்டாடப்பட்டு அதில்  விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கி  பாராட்டினர்.

அதில் பள்ளி  நிர்வாக இயக்குனர் சிந்து வரவேற்புரை நிகழ்த்த  பள்ளி நிறுவனர் து.மணி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர்  ம.சத்தியமூர்த்தி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 

அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்த பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் எ. முத்துக்கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் இ.ரவிந்தர் விழாவினை தொகுத்து வழங்கினார் 

விழா ஏற்பாடுகளை ஆசிரியை ஆசிரியர்கள் செய்தனர். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழா முடிவில்  ஆசிரியர் காயத்ரி நன்றி உரை கூறினார்.

செய்தியாளர்

மாருதி மனோ