ரெட்டியார்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

தென்காசி

ரெட்டியார்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

ரெட்டியார்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் திறந்து வைத்தார்

தென்காசி ஏப்ரல் 12


தமிழ்நாடு முதல்வர்  72 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம் பெருமாள் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை அமைப்பாளர் பொன்னரசு சிம்சோன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிளைக் கழகச் செயலாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
சிவ பத்மநாதன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது காவலாகுறிச்சி பெரிய குளத்திற்கு 
18 கோடி தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சியில் கால்வாய் வெட்ட நிதி ஒதுக்கப் பட்டுள்ளது
கடங்கநேரிக்கு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரப்பட்டது.

ரெட்டை குளம் கால்வாய் பணி ஆய்வு செய்யப்பட்டு 65 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு வருகிற நிதியாண்டில் பணி துவங்கும் நிலையில் உள்ளது மேலும் கழக அரசு மகளிர் உரிமைத் தொகை மாணவ மாணவியருக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை காலை சிற்றுண்டி போன்ற நல்ல திட்டங்களை அரசு தந்துள்ளது என குறிப்பிட்டு பேசினார்.


இந் நிகழ்ச்சியில் முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பி முருகன் காவலா குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் கீழக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் கீழப்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஜெகதீசன் ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேஸ்வரி பாலகுமார், முத்துமாரி ரமேஷ்,சங்கர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணபதி முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், சோனா மகேஷ்  ராஜபாண்டியன் APN குணா,ஒன்றிய பிரதிநிதி சேர்மலிங்கம் கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கடங்கநேரி அசோக் அரவிந்த் திலக் வழக்கறிஞர் பாப்பாக்குடி ஒன்றிய துணை அமைப்பாளர் புதுப்பட்டி சுந்தர் வழக்கறிஞர் பர்வீன் முருகேசன் அருணாசலம் ஓவியா முருகன் முத்துசாமி ராசையா ராஜதுரை பிரபாகரன் சொரிமுத்து முருகேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் துரைராஜ் மாடசாமி இசக்கி ராஜ்,மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இறுதியாக மாரீஸ்வரன் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்